Discover the Story of Tadeu Pierced by a Spear.ஈட்டியால் குத்தப்பட்ட ததேயு


Discover the Story of Tadeu Pierced by a Spear



 ததேயு எனப்பட்ட பூதா 


இயேசுவின்‌ பன்னிரு சீடர்களில்‌ இருவர்‌ யூதா என்ற பெயரையுடையவர்கள்‌. 


ததேயு எனப்பட்ட யூதா, ஸ்காரியோத்தல்லாத யூதா என்றும்‌ அழைப்படுகிறார்‌ (யோவான்‌ 14:22). மற்றொரு யூதா இயேசுவைக்‌ காட்டிக்‌ கொடுத்த யூதாஸ்காரியோத்து. புனித ஜெரோம்‌ ததேயுவை டிரையோனியஸ்‌ என்றழைக்கிறார்‌. டிரையோனியஸ்‌ என்பதற்கு மூன்று பெயார்களையுடைய மனிதர்‌ என்பது பொருளாகும்‌. இவருக்கு யூதா என்ற பெயர்‌ மட்டுமின்றி ததேயு, லெபேயு என்ற பெயர்களும்‌ உண்டு (மத்‌. 10:3). ததேயு என்ற பெயர்‌ தாட்‌ என்ற அராமைக்‌ சொல்லிருந்து உருவானது. இந்தச்‌ சொல்லுக்கு மார்பு என்பது பொருளாகும்‌. லெபேயு என்ற பெயர்‌ லெப்‌ என்ற எபிரெயச்‌ செல்லிலிருந்து வந்தது. இந்தச்‌ சொல்லுக்கு ( இதயம்‌ என்பதே பொருள்‌. இந்த இரண்டு பெயர்களுமே அன்புக்குரியவர்‌, பாசத்துக்குரியவார என்ற பொருள்களையே தருகின்றன. புதிய ஏற்பாட்டில்‌ பலர்‌ யூதா என்ற பெயரையுடைய வாகள்‌. இவர்களில்‌ ததேயுவும்‌, ஸ்காரியோத்தும்‌ இயேசுவின்‌ ்‌ சீடர்கள்‌. மற்றொரு யூதா இயேசுவின்‌ சகோதார்‌( மத்தேயு 13:55


மாற்கு 6:33; இவரே யூதாவின்‌ நிருபத்தை எழுதியவர்‌ என்று கூறப்படுகிறது. கலிலேயனாகிய யூதாஸ்‌ என்பவனைப்‌ 

பற்றிட அப்போஸ்தலர்‌ 5:37 குறிப்பிடுகிறது. 



வேதாகமத்தில்‌ ததேயு


இயேசுவின்‌ சீடர்களான இரு யூதாக்களில்‌ ததேயு 


விசுவாசத்தில்‌ நிலைத்து நிற்கும்‌ மன உறுதி படைத்தவர்‌. இவர் ஸ்காரியோத்தைப்‌ போலத்‌ திசைமாறிப்‌ போய்விட வில்லை. 

வேதாகமத்தில்‌ இவர்‌ இயேசுவிடம்‌ ஒரு கேள்வியைக்‌ கேட்கின்றார்‌. இயேசு கெத்செமனே தோட்டத்திற்குச்‌ 

செல்லுமுன்பு அவரிடம்‌ இறுதியாகக்‌ கேட்கப்பட்ட கேள்வி . இது 


தமது உயிர்த்தெழுதலுக்குப்‌ பிறகு சீடர்களுக்குத்‌ தேற்றரவாளணாக அனுப்பப்படும்‌ பரிசுத்த ஆனவியானவரைப்‌ . 

பற்றி இயேசு தெளிவாகக்‌ கூறிக்‌ கொண்டிருந்து வேளை அது. “என்‌ கற்பனைகளைப்‌ பெற்றுக்கொண்டு அவைகளைக்‌ கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில்‌ அனிபாயிருக்கிறான்‌. 


என்னிடத்தில்‌ அன்பாயிருக்கிறவன்‌ என்‌ பிதாவுக்கு அன்பாயிருப்பான்‌; நானும்‌ அவனில்‌ அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்‌”” என்றார்‌ இயேசு. பரிசுத்த ஆவியானவரின்மூலம்‌ தாம்‌ இவ்வாறு வெளிப்‌ படுவதையே இயேசு குறிப்பிட்டார்‌. ம்‌ 


உடனே யூதா அவரை நோக்கி; ஆண்டவரே, நீர்‌ உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல்‌ எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன? (யோவான்‌ 14:22 என்று கேட்டார்‌. 


இந்தக்‌ கேள்வி சிறந்த ஒரு தத்துவ விளக்கப்‌ பதிலைப்‌ பெற்றுத்‌ தருகிறது. 


கிறிஸ்துவின்‌ கட்டளையைக்‌ கைக்கொள்ளுவது எவ்வாறு? கிறிஸ்துவின்‌ பாதையில்‌ நடப்பது எப்படி? சிறந்த கிறிஸ்தவனாக வாழ்வது எப்படி? எல்லாவற்றிற்கும்‌ ஒரே பதில்‌ --இயேசுவில்‌ அன்புகூரவேண்டும்‌ (ஒருவன்‌ என்னில்‌ அன்பாயிருந்தால்‌ -வசனம்‌ 23). நாம்‌ அவரில்‌ அன்பாயிருந்தால்‌ மட்டுமே அவரது கற்பனைகளைக்‌ கைக்கொள்ள முடியும்‌; அவரது பாதையில்‌ நடக்க முடியும்‌; சிறந்த கிறிஸ்தவனாக வாழ முடியும்‌ 


இவ்வாறு கிறிஸ்துவில்‌ அன்பாயிருப்பவன்மீது பிதாவும்‌ அன்பாயிருப்பார்‌. இருவருமாக பரிசுத்த ஆவியானவரின்‌ ரூபத்தில்‌ வந்து அவனோடு வாசம்பண்ணுவார்கள்‌. அப்போது ஜீவணுள்ள இயேசு தன்னை அவனுக்கு வெளிப்படுத்துவார்‌; அவா்‌ இன்னும்‌ ஜீவனோடு தன்னில்‌ வாசம்பண்ணுவதை அவன்‌ உணார்ந்துகொள்வான்‌ ? அவரை நேசிக்காத உலகம்‌ அவரைக்‌ கண்டுகொள்ள முடியாது 1 


கிறிஸ்துவை நேசித்த ததேயு மற்ற அப்போஸ்தலா்‌களுடன்‌ பரிசுத்த ஆவியானவரைப்‌ பெற்றுக்கொள்கிறார்‌ (அப்‌. 7:13--2ஆ. 


ததேயுவின்‌ ஊழியம்‌ 


யூசிபஸ்‌ என்ற வரலாற்றாசிரியர்‌ ததேயு பெசபடோமியாவின்‌ அரசர்‌ அப்காருக்கு கிறிஸ்துவைப்‌ போதிக்கச்‌ சென்றார்‌ என்று கூறுகிறார்‌. அங்கு ததேயு அரசன்‌ உட்பட அநேகரின்‌ நோய்களைக்‌ குணமாக்கினார்‌. அநேகர்‌ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்‌. 


ஆர்மீனியா பகுதியில்‌ ஊழியம்‌ செய்த ஐந்து அப்போஸ்தலர்களில்‌ ததேயுவும்‌ ஒருவர்‌. ததேயுவும்‌, பற்தொலெொமேயுவும்‌ ஆர்மீனிய சபையின்‌ பிதாக்கள்‌ என்றழைக்கப்படுகிறார்கள்‌. ஆர்மீனியா உலகத்தின்‌ மூதல்‌ கிறிஸ்தவ நாடாகியது. 


ததேயு கி.பி. 43 முதல்‌ 60 வரையிலும்‌ பற்தொலொமேயு கி.பி. 60 முதல்‌ 68 வரையிலும்‌ இங்கு ஊழியம்‌ செய்தனர்‌. எடெஸ்ஸா என்ற நகரில்‌ ததேயு ஊழியம்‌ செய்ததாக ஆர்மீனிய திருச்சபை வரலாறு கூறுகிறது. ததேயு ஆர்மீனிய திருச்சபையின்‌ முதல்‌ பிதாவானார்‌.


தனது ஊழியத்தின்‌ இறுதி ஆண்டுகளை ததேயு பாரசீகத்தில்‌ கழித்தார்‌. அவருடன்‌ கானானியனாகிய சிமோனும்‌ ஊழியம்‌ செய்தார்‌. 

அங்கு சுவானிர்‌ என்ற இடத்தில்‌ விக்கிரக ஆராதனை செய்துவந்த கூட்டத்தினா்‌ அவர்களைப்‌ படுகொலை செய்தனர்‌. இவர்களோடு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்‌ களும்‌ இரத்தச்‌ சாட்சிகளாக மரித்தனார்‌ ! 


கி.பி. 66இல்‌ ததேயு, சீமோன்‌ இருவரும்‌ இரத்தச்‌ சாட்சிகளாக மரித்தனர்‌.


 சீமோன்‌ இரம்பத்தால்‌ அறுத்துக்‌ கொலை செய்யப்பட்டார்‌. 

ததேயு  ஈட்டியால்‌ குத்திக்‌. கொலைசெய்யப்பட்டார்‌. 

இருவரது உடல்களும்‌ ஒன்றாகவே அடக்கம்செய்யப்பட்டன என்று கூறப்படுகிறது. 


டாப்ரிஸ்‌ என்ற நகருக்கு 40 மைல்‌ தொலைவில்‌ காஸ்பியன்‌ கடலினருகே இருந்த காராகெலேசா என்ற கிராமத்தில்‌ இவர்களது கல்லறை இருந்தது. 


இந்த இடம்‌ 

தற்போது ஈரானில்‌ உள்ளது. செங்கிஸ்கானின்‌ முற்றுகையின்போது இந்தக்‌ கல்லறையிலிருந்து இவர்களது உடல்கள்‌ பாதுகாப்பாக ரோம்‌ நகருக்கு எடுத்துச்‌ செல்லப்பட்டன. 


தற்போது இவர்கள்‌ எலும்புகள்‌ ரோமிலுள்ள புனித பீட்டர்‌ ஆலயத்திலும்‌, ஸ்பெயினில்‌ டோலோசா நகரிலுள்ள புனித சாடர்னினஸ்‌ ஆலயத்திலும்‌, பிரான்சில்‌ டோலோ நகரிலுள்ள புனித செர்னின்‌ ஆலயத்திலும்‌ உள்ளன. 


Read more...







Comments

Popular posts from this blog

how to pronounce peniel in the bible

Liberalism Comes in Right-Wing and Left-Wing Varieties. Christians Should Reject Both.

Christian Aid Agencies Have a New Approach to Famine