The Story of Simon Cut Down By The Sword - History & Facts இரம்பத்தால்‌ அறுத்துக்‌கப்பட்ட சீமோன்

 இரம்பத்தால்‌ அறுத்துக்‌கப்பட்ட சீமோன்



கானானியனாகிய சீமோன்‌ 


இயேசுவின்‌ பன்னிரு சீடர்களில்‌ இருவர்‌ சீமோன்‌ என்ற பெயரையுடைவர்கள்‌. ஒருவர்‌ எல்லோருக்கும்‌ தெரிந்த சீமோன்‌ பேதுரு, மற்றவர்‌ அதிகமாக அறியப்படாத கானானியனாகிய சிமோன்‌, இவரது பெயர்‌ மட்டுமே வேதாகமத்தில்‌ கூறப்பட்டுள்ளது. 


கானானியனாகிய சீமோன்‌ (மத்‌. 10:4, மாற்கு 3:16) இயேசு முதலாவது அற்புதத்தைச்‌ செய்த கானா என்ற ஊரைச்‌ சேர்ந்தவர்‌. பேதுரு, அந்திரேயா, யோவான்‌, யாக்கோபு, ததேயு, யூதாஸ்காரியோத்து, சீமோன்‌ இவர்கள்‌ ஏழுபேரும்‌ ஒரே வேளையில்‌ இயேசுவின்‌ சீடர்களாக அவரால்‌ அழைக்கப்பட்டவர்கள்‌ என்று எபியோனைட்‌ நற்செய்தி நூல்‌ கூறுகிறது. 


இந்தச்‌ சீமோன்‌ “செலோத்தே' (லூக்கா 6:15; அப்‌. 1:13) என்றும்‌ அழைக்கப்பட்டார்‌. செலோத்தே என்பது அவர்‌ சார்ந்திருந்த அரசியல்‌ பிரிவைக்‌ குறிக்கிறது. செலோத்தே (2௦31௦0) 


யூதர்கள்‌ ரோமர்களால்‌ அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலம்‌ அது. ஏரோது போன்ற யூத மன்னர்கள்‌ ரோமப்‌ பேரரசனுக்கு கப்பம்‌ கட்டும்‌ சிற்றரசர்களாகவே இருந்தார்கள்‌. பிலாத்து போன்ற ரோம அரசுப்‌ பிரதிநிதிகளாலேயே நாடு நிர்வகிக்கப்பட்டு வந்தது. 


யூத மக்கள்‌ அமைதியாக அடிபணிந்து இருந்தாலும்‌ அவர்களிடையே ரோமரிடமிருந்து விடுதலை பெறவேண்டிப்‌ போரிட்ட ஒரு கூட்டமும்‌ இருந்தது. இந்த விடுதலைப்‌ படையே “செலோத்தே'. இவர்கள்‌ தீவிரமான தேசியவாதிகள்‌. கொரில்லா முறையில்‌ தாக்கும்‌ தோர்ச்சி பெற்றவர்கள்‌. நாடெங்கும்‌ ரோம அரசுக்கு எதிராகப்‌ புரட்சியைத்‌ தூண்டி வந்தார்கள்‌. 


இயேசுவின்‌ காலத்திற்குப்‌ பிறகு கி.பி. 66 முதல்‌ 70 வரை நடைபெற்ற யூதப்‌ போரை நடத்தியவர்கள்‌ இந்தக்‌ கிளர்ச்சியாளர்களே. எருசலேமிருந்த ரோமப்படையை விரட்டிவிட்டு எருசலேமைக்‌ கைப்பற்றிக்‌ கொண்டார்கள்‌. 


இதைக்கண்ட ரோமப்‌ பேரரசன்‌ நீரோ யூதர்களை எதிர்க்க ஜெனரல்‌ டைட்டஸ்‌ பிளேவியஸ்‌ வெஸ்பாசியானஸ்‌ தலைமையில்‌ பெரும்படை ஒன்றை அனுப்பினான்‌. 67ஆம்‌ ஆண்டு இந்தப்‌ படை கலிலேயாவைக்‌ கைப்பற்றியது. கி.பி. 70இல்‌ வெஸ்பாஸியானஸ்‌ ரோமப்‌ பேரரசரானார்‌. அவரது மகன்‌ டைட்டஸ்‌ பெரும்‌ படையுடன்‌ எருசலேமை முற்றுகையிட்டார்‌. தீவிரவாதிகள்‌ கிஸ்சாலா ஜாணின்‌ தலைமையில்‌ எருசலேமைக்‌ காக்க முயன்றனர்‌. 


போரில்‌ தோற்றுவிடுவோம்‌ என்று தெரிந்த பின்னரும்‌ தீவிரவாதிகள்‌ சரணடையவில்லை. எருசலேம்‌ கோட்டை தகர்க்கப்பட்டது. ஆலயம்‌ தீக்கிரையாக்கப்பட்டது. ஆயிரக்‌ கணக்கானோர்‌ கொல்லப்பட்டனர்‌, அநேகர்‌ அடிமைகளாகச்‌ சிறைப்பிடிக்கப்பட்டனர்‌. 


கிஸ்சாலா ஜாண்‌ சிறைப்பிடிக்கப்பட்ட பின்னரும்‌ தீவிரவாதிகளில்‌ நூற்றுக்கணக்கானோர்‌ மசாடா என்ற கோட்டைக்குத்‌ தப்பியோடினர்‌. கி.பி, 71இல்‌ ரோமப்‌ படைத்தளபதி சில்வா மசாடா கோட்டையை முற்றுகை யிட்டார்‌. உண்ண உணவில்லாத நிலை ஏற்பட்ட பின்னரும்‌ செலோத்துகள்‌ சரணடையவில்லை. பட்டினியால்‌ மடிந்தனர்‌. 'ரோமப்படை அந்தக்‌ கோட்டையை இறுதியில்‌ கைப்பற்றிய போது, அங்கு மூன்றே செலோத்துக்கள்தான்‌ உயிரோடு இருந்தனா. 


இத்தகைய அளவு நெஞ்சுரமும்‌, தேசப்பற்றும்‌ கொண்ட செலோத்தே பிரிவைச்‌ சார்ந்த சீமோன்‌, அமைதியே உருவான சமாதானப்‌ பிரபு இயேசுவைப்‌ பின்பற்றியது வியப்பாக இருக்கிறது. 


காணாவூரில்‌ இயேசு செய்த அற்புதத்தைக்‌ கண்ட சீமோன்‌ அவர்‌ யூதரின்‌ அரசராக ஆளுகைசெய்ய வல்லவர்‌ என்ற எண்ணத்தில்‌ அவரைப்‌ பின்தொடர்ந்திருக்கலாம்‌. அவர்‌ யாரென்று தெரிந்திருந்த பின்னரும்‌ அவரைத்‌ தன்‌ சீடராக அழைத்தார்‌ இயேசு. தீவிரவாதியாகிய சிமோனைக்‌ கூட சாந்தமானவராக மாற்றக்கூடியவரல்லவா இயேசு? தமது அரசு இந்த உலகத்துக்கு உரியதல்ல என்று இயேசு கூறியபோது அவரிடம்‌ “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத்‌ திரும்பக்‌ கொடுப்பீர்‌?” (அப்‌. 1:6) என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்தக்‌ கேள்வியைக்‌ கேட்டது சிமோனாகத்தான்‌ இருக்க வேண்டும்‌. இஸ்ரவேலர்‌ தமது அரசைத்‌ திரும்பப்‌ பெற வேண்டும்‌ என்ற வாஞ்சை இன்னும்‌ அவருக்கு இருந்தது. ஆனால்‌ இயேசுவோ அது தேவசித்தம்‌ என்று கூறி அந்தப்‌ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்‌  பூமியின்‌ கடைசிபரியந்தமும்‌ நற்செய்தியை 


-அறிவிப்பதே சீடர்களின்‌ கடமை என்று வலியுறுத்தினார்‌ 

இயேசு!


தேசியவாதியாக இருந்த சிமோன்‌ இயேசுவின்‌ கட்டளைக்குக்‌ கீழ்ப்படிந்தார்‌. பரிசுத்த ஆவியின்‌ அபிஷேகம்‌ பெற மேல்‌ அறையில்‌ கூடியிருந்தவர்களில்‌ அவரும்‌ ஒருவர்‌ ப்‌. 1:13). பூதர்களின்‌ விடுதலையை எண்ணிக்‌ குழப்பிக்‌ கொள்ளாமல்‌ அவர்‌ பறஜாதிகளிடையே கிறிஸ்துவைப்‌ பற்றிச்‌ சாட்சி பகரப்‌ புறப்பட்டார்‌ !




 சீமோனின்‌ ஊழியம்‌ 


எகிப்து, சைரீன்‌, மாரிடானியா, லிபியா போன்ற, வடஆப்பிரிக்கப்‌ பகுதிகளில்‌ தனது ஊழியத்தைத்‌ துவக்கினார்‌ சிமோன்‌. வட ஆப்பிரிக்காவின்‌ மிகப்பெரிய நகரங்களில்‌ ஒன்றான கார்த்தேஜ்‌ நகரில்‌ சீமோனின்‌ ஊழியம்‌ வலுப்பெற்றது. கார்த்தேஜ்‌ நகரம்‌ ஒரு பெரிய கிறிஸ்தவ மையமாக வளர்ந்தது. கி.பி, 216இல்‌ கார்த்தேஜில்‌ நடந்த 


... கிறிஸ்தவ மாநாட்டில்‌ 71 ஆப்பிரிக்கப்‌ பேராயர்கள்‌ கலந்து 

கொண்டனராம்‌! 


வட  ஆப்பிரிக்காவுக்குப்‌ பிறகு ஐரோப்பாவிலுள்ள ஸ்பெயின்‌ நாட்டில்‌ தனது பணியைத்‌ தொடர்ந்தார்‌ சிமோன்‌. அக்காலத்தில்‌ ஸ்பெயினுக்கும்‌ பிரிட்டனுக்கும்‌ வாணிபத்‌ தொடர்பு இருந்து வந்தது. பிரிட்டனில்‌ சீமோன்‌ 4 கி.பி. 50இல்‌ அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புடன்‌ சீமோன்‌ பிரிட்டனில்‌ கிளாஸ்டன்பரி என்ற இடத்தில்‌ ஊழியத்தைத்‌ துவங்கினார்‌. இவ்வேளையில்‌ பிரிட்டன்‌ ரோமர்களின்‌ ஆளுகையின்கீழ்‌ இருந்தது. கி.பி. 42இல்தான்‌ ரோமர்கள்‌ லண்டனியம்‌ (லண்டன்‌) என்ற கோட்டையைக்‌ கட்டி பாளயமிறங்கியிருந்தனர்‌. ரோமப்படையில்‌ ரோமர்கள்‌ மட்டுமின்றி கிரேக்கர்கள்‌, ஸ்பானியர்கள்‌ மற்றும்‌ பல தேசத்தாரும்‌ இருந்தனர்‌. அதுமட்டுமின்றி பிரிட்டனிலுள்ளவர்கள்‌ ஏற்கெனவே ரோமர்களுடன்‌ வாணிபத்‌ தொடர்பு வைத்திருந்தமையால்‌ லத்தீன்‌, கிரேக்க மொழிகளை அறிந்திருந்தனர்‌. 


சீமோன்‌ லண்டன்‌ பகுதியிலுள்ள ரோமக்குடியிருப்புகளிலும்‌, லத்தீன்‌ தெரிந்த பிரிட்டிஷாரிடையேயும்‌ ஊழியம்‌ செய்து வந்தார்‌. அப்போது பிரிட்டனில்‌ ரோமப்‌ பிரதிநிதியாக இருந்த கேடஸ்‌ டெசியானஸ்‌ சீமோனைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்டு கடும்‌ கோபம்‌ கொண்டாரென்றும்‌, 



அவரைப்‌ பிடித்து, கி.பி. 61ஆம்‌ ஆண்டு மே 10ஆம்‌ நாள்‌ லிங்கன்ஷயர்‌ பகுதியிலுள்ள கெயிஸ்டர்‌ என்னுமிடத்தில்‌ சிலுவையி லறைந்து கொன்றா ரென்றும்‌ ஒருசில வரலாற்றாசிரியர்கள்‌ கூறுகின்றனர்‌. 


ஆனால்‌ சீமோன்‌ பிரிட்டனில்‌ மரிக்கவில்லையென்று பல வரலாற்றுக்‌ குறிப்புகள்‌ திட்டவட்டமாகக்‌ கூறுகின்றன. 


கி.பி. 59 முதல்‌ 62 வரை பிரிட்டனில்‌ போவாதீசியன்‌ சண்டை நடந்தது. ரோமர்களால்‌ : அரசுப்‌ பதவியை இழந்த போவாதிகா என்ற அரசி தனது விசுவாசப்‌ படையைத்‌ திரட்டி ரோமரா்களைக்‌ கொன்று குவித்தாள்‌. இறுதியில்‌ லண்டனி லிருந்த ரோமர்களின்‌ கோட்டையையும்‌ சுட்டெரித்தாள்‌. இவ்வேளையில்‌ ரோமர்களோடுகூட அநேக வெளிநாட்டினா்‌ பிரிட்டனைவிட்டு வெளியேறினர்‌. அப்போஸ்தலனாகிய சீமோனும்‌ பிரிட்டனைவிட்டு வெளியேறி மீண்டும்‌ பாலஸ்‌ தீனத்துக்கு வந்தார்‌. 



இரத்தச்சாட்சியாக மரித்த சீமோன்‌ 


பாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்கு ஊழியம்செய்யச்‌ சென்ற சீமோன்‌ அங்கு அப்போஸ்தலனாகிய ததேயுவைச்‌ சந்தித்தார்‌. இருவருமாக பாரசீகத்துக்குச்‌ சென்றனர்‌. 


அங்கு சுவானிர்‌ என்ற இடத்தில்‌ விக்கிரக ஆராதனை செய்துவந்த கூட்டத்தினர்‌ அவர்களைப்‌ படுகொலை செய்தனர்‌. சீமோன்‌ இரம்பத்தால்‌ அறுத்துக்‌ கொலை செய்யப்‌ பட்டார்‌. ததேயு ஈட்டியால்‌ குத்திக்‌ கொலைசெய்யப்பட்டார்‌. 


இருவரது உடல்களும்‌ ஒன்றாகவே அடக்கம்‌ செய்யப்பட்டன என்று கூறப்படுகிறது. தற்போது இவர்களது எலும்புகள்‌ ரோமிலுள்ள புனிதபீட்டர்‌ ஆலயத்திலும்‌, ஸ்பெயினில்‌ டொலோசா நகரிலுள்ள புனித சாடர்னினஸ்‌ ஆலயத்திலும்‌, பிரான்சில்‌ டோலோ நகரிலுள்ள புனித செொனின்‌ ஆலயத்திலும்‌ உள்ளன. 

Read more...



Comments

Popular posts from this blog

how to pronounce peniel in the bible

Liberalism Comes in Right-Wing and Left-Wing Varieties. Christians Should Reject Both.

Christian Aid Agencies Have a New Approach to Famine