உங்கள் பிள்ளைகள் எப்படி?
உங்கள் பிள்ளைகள் எப்படி? பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று சங்கீதம் 127:3ல் வாசிக்கிறோம். கர்த்தர் கொடுத்திருக்கிற பிள்ளைகளை கர்த்தருக்குப் பிரியமாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. முதலாவது, கர்த்தருடைய வசனத்தை பிள்ளைகளுக்கு கருத்தாய் போதிக்க வேண்டும். உபாகமம் 6:7ல் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர்களிடத்தில், நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும் போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிறபோதும், எழுந்திருக்கும்போதும், அவைகளைக்குறித்துப் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எனது திருச்சபையின் ஞாயிறு பள்ளியில் 200க்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் இன்று அதில் நான்கில் ஒரு பங்கு பிள்ளைகள் கூட ஞாயிறு பள்ளிக்கு ஒழுங்காக வருகிறதில்லை. இது எனது திருச்சபையின் ஞாயிறு பள்ளியில் மட்டுமல்ல, பெரும்பாலான ஞாயிறு பள்ளிகளில் நிலமை இதுதான். இன்றைக்கு நாட்டில் சிறு பிள்ளைகளின் எண்ணிக்கை திடீரென்று குறைந்து விட்டதா? இல்லவே இல்லை. பெற்றோர்கள், பிள்ளைகள் ஒழுங்காக ஞாயிறு பள்ளிக்கு செல்வதைக்குற...